ஈரோடு : பெருந்துறை அருகே பெற்றோர் இறந்த ஏக்கத்தில், (22), வயது வாலிபர் விபரீத முடிவை நாடியது, சோகத்தை ஏற்படுத்தியது. பெருந்துறை அருகேயுள்ள குள்ளம்பாளையம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த, ராமசாமி மகன் பன்னீர்செல்வம், (22), இவரின் பெற்றோர் உடல் நிலை, சரியில்லாமல், சில ஆண்டுகளுக்கு, முன் இறந்த விட்டனர். இதனால் சிறிது மனநிலை பாதிக்கப்பட்ட, நிலையில் இருந்தார். சில நாட்களுக்கு முன் ஊமத்தங்காயை, அரைத்து குடித்து விட்டார். ஈரோடு அரசு மருத்துவமனையில், சேர்க்கப்பட்ட அவர், நேற்று சனிக்கிழமை சிகிச்சை, பலன் அளிக்காமல் இறந்தார். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :