சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் தமிழக அரசின் விலையில்லா சீருடைகள் வழங்கி பேசுகையில், நான் அரசுப் பள்ளியில் தான் படித்து வந்தேன். அதனை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இப்பள்ளியில் திறமைகளை வெளிக்கொணர பல்வேறு நல்ல செயல்பாடுகளை செய்து வருகின்றனர்.
ஆன்லைன் கிளாஸ் எல்லா இடத்திலும் நடைபெறுகிறது. கொரோனா காலத்தில் அறிவியல் முன்னேற்றம் எந்த அளவுக்கு நன்மைகளை தந்து உள்ளதோ அதே அளவு தீமைகளையும் தருகிறது. நாம் நன்மைகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் .பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும்.
கொரோனா காலத்தில் பிறகு 70% குற்றம் நடைபெறுவதற்கு ஏதுவாக மாணவர்கள் வருகிறார்கள். மொபைல் போன் அதிகமாக பயன்படுத்துவதால் குற்றங்களும் அவர்களை அறியாமல் அதிகமாகிவிடுகிறது.
அதனை பெற்றோர் தான் சரி செய்ய வேண்டும். எனவே பெற்றோர் குழந்தைகள் மொபைல் போனை பயன்படுத்த போது அவசியம் கண்காணியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலட்சுமி ,செல்வ மீனாள், முத்துமீனாள் ,கருப்பையா ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.