ஈரோடு : பெங்களூருவில் இருந்து பொள்ளாச்சிக்கு, சொகுசு பேருந்து பயணிகளுடன், சென்று கொண்டிருந்தது. பேருந்தை பெருமாள், என்பவர் ஒட்டி வந்தார். மாற்று ஓட்டுநராக செல்வராஜ், என்பவர் உடன் வந்தார். பேருந்தில், 25 பேர் பயணம் செய்தார்கள். நேற்று அதிகாலை 4 மணி அளவில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் , உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பூவம்பாளையம் பிரிவு அருகே பேருந்து , சென்ற போது,எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரியின் மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சரஸ்வதி (74), என்ற மூதாட்டி சம்பவ இடத்திலே பலியானார். மேலும் 14, பேர் படுகாயமடைந்து பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து, பெருந்துறைகாவல் துறையினர் , வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :