இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், ஐ.பி.எஸ்., அவர்கள் இன்று பெருநாழி காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், வழக்கு விசாரணை நிலை, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், பொதுமக்கள் குறைகளின் தீர்வு, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆய்வு செய்தார். மேலும், சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கினார்.
அத்துடன், காவல்துறையினர் பொதுமக்களுடன் நல்லுறவை பேணுவதுடன், குற்றச் செயல்களைத் தடுக்க துரிதமாகவும், நேர்மையாகவும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். ஆய்வின் போது காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.
















