தேனி: தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஊரடங்கு அமலில் இருப்பதை மீறி இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி, சுவாப் டெஸ்ட் மேற்கொள்ளப்பட்டது.
ஊரடங்கு அமுலில் உள்ள போதே, முக்கிய வீதிகளில் கூட்டம், கூட்டமாக மக்கள் வந்தனர்.இதனால் காவல்துறை உதவியுடன் ஸ்வாப் டெஸ்ட் எடுக்கும் பணி நடந்தது. இதில் சுகாதாரத்துறையினர் மிக ஆர்வமாக ஈடுபட நடந்து வந்தவர்களோ சிரமங்களை சந்தித்தனர்.