பெரம்பலூர் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி, அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் அரசு அனுமதியின்றி ,மணல் திருட்டில் ஈடுபடும் நபர்களை, கைது செய்யுமாறு உத்தரவிட்டார். அதனடிப்படையில் நேற்று (01.05.2022), ம் தேதி குன்னம் காவல் நிலைய, உதவி ஆய்வாளர் திரு. செல்வராஜ், நிலைய காவலர்களுடன் ரோந்து அலுவலில் இருந்த போது அவருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி பெரம்பலூர் மாவட்டம், வயலப்பாடி பஸ் ஸ்டாப் வேப்பூர், பிரிவு பாதை அருகே அரசு அனுமதியின்றி டிராக்டர் வண்டியில் மணல் திருடி சென்ற தேவராஜ் (21), பெரம்பலூர் மாவட்டம் என்பவரை பிடித்து கைது, செய்து டிராக்டர் வண்டி மற்றும் ரூபாய் 3000, மதிப்புள்ள மணலுடன் நிலையம் வந்தார். மேற்படி நபர் மீது குன்னம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு உதவி ஆய்வாளர் திரு.பார்த்திபன், அவர்கள் அனுப்பி வைத்தார்.