பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி, அவர்கள் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மற்றும் குன்னம், வட்ட வருவாய்துறையினர் இணைந்து குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது மக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை, தீர்க்க மனு விசாரணை முகாம் நடைபெற்றது.
மேலும் மனு விசாரணை முகாமில் , பெரம்பலூர் மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.ரஞ்சனா உதவி ஆய்வாளர் திரு.முகமது அபுபக்கர், மற்றும் தலைமைக் காவலர்களும், குன்னம் வருவாய் வட்டாட்சியர் திருமதி. அனிதா, ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இந்த மனு விசாரணை முகாமில் மொத்தம் 08 மனுக்கள் பெறப்பட்டு 07 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.