பெரம்பலூர்: தமிழக அரசின் ஆணைப் படி, கடந்த 1997-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில், இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 25, ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக, பதவி உயர்வு அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து காவல் பிரிவு மற்றும் சிறப்பு பிரிவுகளில், பணிபுரிந்து 25 ஆண்டுகள் எவ்வித தண்டனை மற்றும் காவல்துறை ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படாத , 35 தலைமை காவலர்கள், சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றனர்.
அவ்வாறு, பதவி உயர்வு பெற்றவர்களை, பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், உள்ள கலந்தாய்வு கூடத்தில் 04.05.2022-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி, அவர்கள் நேரில் அழைத்து பதவி உயர்வு பெற்றதற்கு, வாழ்த்துக்களை தெரிவித்தும், வரும் காலங்களில் சிறப்பாக பணிபுரிய பாராட்டுக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.ஆரோக்கியபிரகாசம், திரு.பாண்டியன்,ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.