பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் காவல் நிலையத்தில் , கடந்த 2021-ம் ஆண்டு பதியப்பட்ட குற்ற எண் 25/2021 ச/பி 447, 294(b), 326, 506(1) – IPC 376 r/w SC/ST AMENDMENT ACT 2015 வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரியான அசோக்ராஜ் (22) , தெற்கு மாதேவி ஆலத்தூர் வட்டம், பெரம்பலூர் மாவட்டம். என்பவர் மீது புலன் விசாரணை முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கானது சிறப்பு நீதிமன்ற, விசாரணைக்கு அனுப்பபட்டது.
(தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பாதுகாத்தல்), விசாரணையில் இருந்து வந்த நிலையில் நேற்று (29.04.2022)-தேதி, மேற்படி வழக்கினை விசாரித்த நீதிபதி திருமதி.S.மலர்விழி, என்பவர் மேற்படி எதிரிகளின் குற்றம் உறுதி செய்யப்பட்டதால், எதிரிக்கு 3 வருடம் கடுங்காவல், சிறை தண்டனையுடன் ரூபாய் 5000 அபராதமும் ,அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேற்படி வழக்கில் சிறப்பாக செயல்பட்ட , காவல்துறையினரை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்