திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் தனியார் தங்கு விடுதியில் கடந்த 11-ம் தேதி தைப்பூசம் அன்று துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த காந்தி என்ற பெண்ணை, மர்மநபர் குத்தி கொலை செய்தது தொடர்பாக அடிவாரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து மாவட்ட எஸ்பி.பிரதீப் உத்தரவின் பேரில் பழனி டிஎஸ்பி. தனஞ்செயன் மேற்பார்வையில் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் சார்பு ஆய்வாளர் ராஜகுமாரன் மற்றும் போலீசார் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டார் பழனி பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த ஆனந்த்குமார் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா