திண்டுக்கல்: திண்டுக்கல் நத்தம் ரோடு திருவள்ளுவர் நகரை சேர்ந்த சக்திகணேஷ் மனைவி குடியரசி இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடியரசின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















