திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சீதைகுறிச்சியை சேர்ந்த சுப்புலெட்சுமி என்ற பெண் கூலி வேலை செய்து வருகிறார். இவர் இன்று காலை மானூர் காவல் நிலையத்திற்கு சென்று தனது பணம் மற்றும் செல்போனை காணவில்லை என்று மிகவும் தயங்கிய நிலையில் அங்கு பணியில் இருந்த காவலர் திரு.பசும்பொன் மேதாஜி, அவர்களிடம் தெரிவித்துள்ளார். காவலர் திரு.பசும்பொன் மேதாஜி,அவர்கள் சுப்புலெட்சுமி அவர்களிடம் ஆறுதல் கூறி அவரிடம் விசாரித்து அவர் சென்ற இடங்களை கேட்டறிந்து அங்கு சென்று விசாரித்தார், சுமார் ஒரு மணி நேரம் அவர் சென்ற இடங்களை விசாரித்து பின் பேருந்து நிலைய அருகில் உள்ள கடைகளில் விசாரித்தார் அப்போது அங்குள்ள கடைக்காரர் மணிபர்ஸ் கீழே கிடந்துள்ளது என்று கூறி போலீசாரிடம் ஒப்படைத்தார். அதில் பணம் ரூ.3000 மற்றும் ஒரு செல்போன் இருந்தது. அதனை சுப்புலெட்சுமியிடம் காவலர் திரு. பசும்பொன் மேதாஜி, அவர்கள் காவல் நிலையத்தில் வைத்து ஒப்படைத்தார். இதனை அறிந்த மானூர் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவலரை வெகுவாக பாராட்டினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்கள் உடனடியாக சம்பவயிடங்கள் சென்று விசாரித்து பணம் மற்றும் செல்போனை விரைந்து மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவலர் திரு.பசும்பொன் மேதாஜி, அவர்களை வெகுவாக பாராட்டினார்.