திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள நம்பிகுறிச்சி கிராமம் சி.எஸ்.ஐ சா்ச் தெருவைச் சோ்ந்தவா் ஞானசேகா். இவரது மகன்கள் ராஜேஸ் (30).ராக்கி (26). அதே கிராமத்தைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து மகன் கனிஷ்கா் (20). (25.12.2024) அன்று கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சிகள் சி.எஸ்.ஐ சா்ச்சில் நடைபெற்றன. நிகழ்ச்சியின் முடிவில் திடீரென கனிஷ்கர் தரப்புக்கும் ராஜேஷ் தரப்புக்கும் மோதல் ஏற்பட்டதில் ராஜேஷ் தரப்பினா் கனிஷ்கா் தரப்பினர் இருவரும் ஒருவரை ஒருவர் அறிவாளால் தாக்கியுள்ளனர்.
பின்னா் இரு தரப்பினரும் திசையன்விளை காவல் நிலையத்திற்கு சென்று புகாா் கொடுத்தனா். அப்போது காவல் நிலையத்தில் இருதரப்பினரிடையே மீண்டும் ஏற்பட்டமோதலை தடுத்த பெண் தலைமைக்காவலா் ராமலெட்சுமியை இரும்புக் கம்பியால் தாக்கியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்த போலீஸாா் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இது தொடா்பாக திசையன்விளை போலீசார் வழக்குப் பதிவு செய்து இசக்கிமுத்து உள்ளிட்ட 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்