திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலராக பணியாற்றி வரும் கற்பக ராஜலட்சுமி ஈரோடு மாவட்டம், வ.உ.சி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற 39- வது மூத்தோர் தடகள போட்டிகள்- 2024 விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று “வட்டு எறிதல் போட்டியில் இரண்டாம் இடத்தையும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் இடத்தையும், மற்றும் குண்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார். போட்டிகளில் வென்ற தலைமைப் பெண் காவலரை (31-12-2024) ம் தேதியன்று, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்