குமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆசாரிபள்ளம் அனந்தன் பாலம் பகுதியை சேர்ந்தவர் ராபின்சன்(60). இவருடைய மனைவி 54 வயதான சகாயம். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
மேலும் இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்து வந்த சகாயம் வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் ஆசாரிபள்ளம் போலீசார் நேற்று புதன்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.