விருதுநகர் : விருதுநகர் அருப்புக்கோட்டை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் ரம்யா (28), அருப்புக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் எனக்கும் அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டியை சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது (25) பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்ததாகவும், மீண்டும் என்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் மாரியப்பன், மாமியார் விஜயராணி உள்ளிட்ட அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சித்ரவதை செய்ததாக அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். புகாரின் பேரில் மகளிர் போலீசார் கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.