சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே நேற்று கிருஷ்ணாபுரத்தில் மாரியமன் கோயில் திருவிழா நடந்தது.அப்போது ஜெயராணி வீட்டின் முன்பாக சிலர் பட்டாசு வெடித்தனர்.
இதனால் ஜெயராணிக்கும், சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறின் போது கீழே விழுந்து காயமடைந்த பஞ்சவர்ணத்தை அருகிலுள்ள பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டுச் சென்றனர்.
ஆனால் வழியிலேயே பஞ்சவர்ணம் உயிரிழந்தார்.இதுகுறித்து பஞ்சவர்ணம் கணவர் முத்து அளித்த புகாரில் ஜெயராணி உள்ளிட்ட 4 பேர் மீது இளையான்குடி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.