திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கடந்த ஜூன் 30 ஆம் தேதி பழவூர் அருகே (55) வயது மதிக்கத்தக்க பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக பழவூர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., உத்தரவின் பேரில், பழவூர் பகுதியில் 200 கி.மீ. தொலைவு வரையிலான கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, கன்னியாகுமரி மாவட்டம், மேலமணக்குடியைச் சேர்ந்த அமல்ராஜ் என்ற லிபி (53). மர்ம முறையில் இறந்துகிடந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, காவல்துறையினர் அமல்ராஜ் என்ற லிபியைப் பிடித்து விசாரணை செய்ததில், உயிரிழந்த பெண் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கிரேஸி (55). என்பதும், இந்தப் பெண்ணுடன் அமல்ராஜ் திருவனந்தபுரத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் இங்கு வந்தபோது, பழவூர் அருகே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு தாக்கியதில் அப்பெண் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அமல்ராஜை (13.07.2025 ) அன்று கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்