நெல்லை: நெல்லை மாவட்டம், அத்தி மேடு பகுதியைச் சேர்ந்தவர் சேர்மதுரை இவரது மனைவி கவிதா(27).இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கவிதாவுக்கும், பழைய பேட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் நேற்று டவுன் வழுக்கோடை ஸ்ரீராம்நகர் பகுதியில் நின்று பேசி கொண்டு இருந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சேர்மதுரை, கவிதாவின் தந்தை மற்றும் அவரது உறவினர்களும் சேர்ந்து இருவரையும் விரட்டி கத்தியால் குத்தி உள்ளனர்.இதில் பலத்த காயமடைந்த இருவரும் பாளை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கவிதா உயிரிழந்தார்.
இது தொடர்பாக திருநெல்வேலி நகரம் போலீசார் வழக்குப்பதிந்து சேர்மதுரை, கவிதாவின் தந்தை இசக்கி ஆகியோரை நேற்று கைது செய்தனர்.மேலும் இந்த கொலை தொடர்பாக சிலரை தேடி வருகின்றனர்.