திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஊர்க்காடு, மேல காலணி, நடுத் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து, சுதா தம்பதியினர். கடந்த 2022 ஆம் ஆண்டு குடும்பத் தகராறு காரணமாக சுதா தன்னுடைய கணவரை கொலை செய்த வழக்கில் அம்பாசமுத்திரம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மூன்றாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றம் சுதாவிற்கு ஆயுள் தண்டனையும் மற்றும் ரூபாய் 1000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த அம்பாசமுத்திரம் காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்