திருநெல்வேலி: திருநெல்வேலி, முன்னீர்பள்ளம் பூக்குழியை சேர்ந்தவர் பேச்சியம்மாள். (42/15) அவருடைய தந்தை பெருமாளுக்கும் (65/15) அதே பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள்(46). என்பவருக்கும் இடையே தகாத பழக்கம் இருந்து வந்ததை கண்டித்துள்ளார். இதன் காரணமாக மாரியம்மாள் தூண்டுதலின் பேரில், பெருமாள் பேச்சியம்மாளை கொலை செய்துள்ளார். இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 2015 ம் ஆண்டு பெருமாள் இறந்துவிட்டார். இரண்டாவது குற்றவாளியான மாரியம்மாள் மீதான இவ்வழக்கின் தீர்ப்பாக (22.11.2024) அன்று மாரியம்மாளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1000/- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று கொடுத்த முன்னீர்பள்ளம் காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.க.ப., வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்