மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் பெண் காவல் ஆளிநர்களின் உடல் ஆரோக்கியத்தினை கருத்தில் கொண்டு (16.05.2024) தேதி செம்பனார்கோவில் காவல் சரகம் மேலையூர் அழகு ஜோதி அகாடமியில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி K. மீனா அவர்கள் ஏற்பாட்டில் 100 பெண் காவல் அதிகாரிகள் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு மருத்துவ ஆலோசனை முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் Dr. காசிவிஸ்வநாதன், D.D. GH மயிலாடுதுறை, Dr. பானுமதி, J.D, சீர்காழி, Dr. குணசீலி, DGO, GH மயிலாடுதுறை, Dr. சிவசங்கரி M.D., GH மயிலாடுதுறை மற்றும் திரு செழியன் உடற்பயிற்சி அலுவலர், சாய் ஸ்போர்ட்ஸ், மயிலாடுதுறை ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில் உடலில் தோல்நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றியும் அதை தடுக்கும் வழிமுறைகளை பற்றியும், பெண்களுக்கு உடலில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள் குறித்தும் அதை எவ்வாறு தடுக்க வேண்டும் என்றும், பணியின் போதும் மற்றும் குடும்ப சூழ்நிலைக் காரணமாக ஏற்படும் மனஉளைச்சலை குறைப்பதற்கான வழிமுறைகளையும், உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், உணவு பழக்கவழக்கங்கள். சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியன பற்றி ஆலோசனை வழங்கினர்.