திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் துறையில் பெண் காவலராக பணியாற்றி வருபவர் தங்கமாரி. இவர் தனது குடும்பத்தினருடன் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். (16.07.2025) அன்று
பணிக்கு சென்று விட்டு தங்கமாரி வீடு திரும்பிய போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. மேலும், வீட்டின் உள்ளே பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த சுமார் 45 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்