திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி மேல்முக நாடார் தெருவைச் சோ்ந்தவர் காட்லின் செல்வராணி (49). இவா் தமிழக காவல்துறையில் சென்னையில் 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, தமிழ்நாடு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் தலைமைக் காவலராக திருநெல்வேலி மாவட்டத்தில் மாற்றலாகி வந்து பணிபுரிந்து வந்தார். இவருக்கு உடல்நலம் பாதிப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த நிலையில் (28.02.2025) வெள்ளிக்கிழமை காட்லின் செல்வராணி உயிரிழந்தார்.
இதையடுத்து, கல்லிடைக்குறிச்சி சி.எஸ்.ஐ. சர்ச் கல்லறைத் தோட்டத்தில் 24 குண்டுகள் முழங்க கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் கலா, சிலைத் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் வனிதா ஆகியோர் தலைமையில் அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதில் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்