கடலூர் : நெல்லிக்குப்பம் காவல் சரகம் கொங்கராயனூர் கிராமத்தைச் சேர்ந்த சோனியா என்பவர் சென்னை ஆவடி ஆயுதப்படையில் பெண் காவலராக பணியாற்றி வந்தவர் தற்கொலை செய்து இறந்து விட்டார். சோனியாவின் உடலுக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. ரூபன்குமார் மற்றும் காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.