திருநெல்வேலி: திருநெல்வேலி பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா (28). பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அதே போல், பாளையங்கோட்டை அருகேயுள்ள இட்டேரி பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் என்பவரின் மகன் மாரியப்பன் (52). என்பவரும் கஞ்சா வழக்கில் கைதானார்.
தொடர்ந்து, இவர்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாகக் கூறி, இருவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மரு. வி. பிரசன்னகுமார், இ.கா.ப., மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார். அதன் பேரில் ஆட்சியர் இரா.சுகுமார் பிறப்பித்த உத்தரவுப்படி சரண்யா மதுரை பெண்கள் தனிச் சிறையிலும், மாரியப்பன் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் (16.02.26) அன்று அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















