திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலையூர் நால்ரோட்டில் கடந்த (25.12.2022)- ம்தேதி ஒரு வீட்டில் கூட்டுக் கொள்ளை வழக்கில் 15 நபர்களை வேடசந்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இக்கூட்டு கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களில் முதற்கட்டமாக உசிலம்பட்டியை சேர்ந்த ஜோதி (36)பெ,ரம்பலூரை சேர்ந்த செல்வக்குமார் (48), தஞ்சாவூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (எ) பாலு (35), ஆகிய மூன்று நபர்களின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன், அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் மூன்று நபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். உத்தரவை தொடர்ந்து வேடசந்தூர் காவல் நிலைய போலீசார் ஜோதி, செல்வக்குமார், பாலசுப்பிரமணியன் (எ) பாலு ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா