திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே திருவிதத்தான்புள்ளியை சோ்ந்தவா் செலின் ஶ்ரீஜா (44). இவரது குடும்பத்துக்கும் இதே பகுதியைச் சேர்ந்த சுப்புராஜ் (40). என்பவரின் குடும்பத்திற்கும் நிலத்தகராறு பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனிடையே, வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த செலின் ஶ்ரீஜாவிடம் சுப்புராஜ் தகராறில் ஈடுபட்டு தாக்கியதுடன் மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார். புகாரின் பேரில், சேரன்மகாதேவி காவல் உதவி ஆய்வாளர், விஜயகுமார் வழக்குப் பதிந்து, சுப்புராஜை (28.03.2025) அன்று கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்