தென்காசி : சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அந்தோணி வியாகம்மாள் என்பவரை அதே பகுதியை சேர்ந்த பாத்திமாராஜ் என்பவர் தெருக் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். இது தொடர்பாக மேற்படி நபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை (29.02.24) விசாரணை செய்த நீதிபதி திரு.விஜயக்குமார் அவர்கள் குற்றவாளியான சேர்ந்தமரம் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த அந்தோணி ராயப்பன் என்பவரின் மகன் பாத்திமாராஜ்(49).என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். திறம்பட செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார் B.E., M.B.A., அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.