சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில், ஒரு பெண்ணிடம் தகராறு செய்து, மிக மோசமான வார்த்தைகளால் பெண்ணை அவமானப்படுத்திய வழக்கில், குற்றவாளியை உடனடியாக கைது செய்து ,வாக்குமூலங்கள் மற்றும் வழக்கு ஆவணங்களை சில மணி நேரங்களிலேயே தயார் செய்து, ஒரே நாளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த, திறமையான மதகுப்பட்டி
காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ஜெகதீசன்; மற்றும் குற்றம் மற்றும் குற்றவாளிகள் வலைபின்னல் திட்டத்தில் வழக்கு ஆவணங்களை பதிவேற்றுவது, மற்றும் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்கு உதவி புரிவதிலும், சிறப்பாக பணிபுரிந்து வரும்,
உதவி ஆய்வாளர் திருமதி.வெங்கடேஸ்வரி; மற்றும் காவலர்கள் திருமதி..அருள் ரோஸ்; திருமதி.ராஜ சுந்தரி; திரு.முத்துராமன்; மற்றும் திரு.அழகு சுந்தரம்; ஆகியோரை அழைத்து,சிவகங்கை மாவட்ட போலீஸ் எஸ்.பி. திரு.செந்தில் குமார், பாராட்டி வெகுமதி வழங்கியதோடு, அவர் எழுதிய “பெரிதினும் பெரிது கேள்” புத்தகத்தையும் நேரில் அழைத்து பரிசளித்தார்.