திருநெல்வேலி: திருநெல்வேலி மூன்றடைப்பு அருகே மருதகுளம், தெற்குத் தெருவை சேர்ந்த லீமா ரோஸ் (39) என்பவர் (01.12.2024) அன்று இரவு தும்பு கம்பெனி பணி முடிந்து வீட்டு அருகே நடந்து வந்து கொண்டு இருக்கும் போது, அதே ஊரைச் சேர்ந்த சாலமோன் என்ற பாப்பையா (20). என்ற இளைஞர் தவறான எண்ணத்தில் நடந்து அவதூறாக பேசி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
இது குறித்து லீமா ரோஸ் மூன்றடைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் முருகேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சாலமோன் என்ற பாப்பையாவை (02.12.2024) அன்று கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்