திருநெல்வேலி: திருநெல்வேலி, சுத்தமல்லி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பழவூர், புதுத்தெருவை சேர்ந்த பேச்சியம்மாள்(34). என்பவர் (13.09.2024) அன்று வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருக்கும்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த (உறவினரான) மணிகண்டன் என்ற ஐயப்பன்(25). என்பவர் அவரை பெண்ணென்றும் பாராமல் அவதூறாக பேசி கல்லால் தாக்கி காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார். இது குறித்து பேச்சியம்மாள் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர், கணேஷ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மணிகண்டன் என்ற ஐயப்பனை (14.09.2024) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்