திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கோதைசேரி, உசிலங்குளத்தை சேர்ந்த நந்தினி (32). என்பவர் வீட்டிற்கு முன் நின்று கொண்டிருக்கும்போது அங்கு வந்த ஏர்வாடி, ஆலங்குளம், வடக்கு தெருவை சேர்ந்த ஆனந்தராஜ் (31). முன்விரோதம் காரணமாக அவரை பெண் என்றும் பாராமல் அவதூறாக பேசி கையால் தாக்கி காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து நந்தினி ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் ஏர்வாடி காவல் ஆய்வாளர், சுதா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஆனந்தராஜை இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்