திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகேயுள்ள பருத்திப்பாடு, பகுதியில் வசித்து வருபவர் வேல்சுரேஷ். அதே ஊரில் வசித்து வருபவர் இவரது சகோதரர் சபரி கண்ணன் (35). இவர்கள் இருவருக்கும் இடையே சொத்துப் பிரச்சனை இருந்து வந்த நிலையில் (04.05.2025) அன்று வேல் சுரேஷின் மனைவி மாரியம்மாள் (27). பருத்திப்பாட்டில் உள்ள தனது உறவினர் வீட்டில் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த சபரிகண்ணன், மாரியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டு அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து மாரியம்மாள் அளித்த புகாரின்பேரில், மூலைக்கரைப்பட்டி காவல் உதவி ஆய்வாளர், பார்த்திபன் வழக்குப்பதிந்து சபரி கண்ணனை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்