திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த (29) வயது பெண்ணுக்கு அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு டார்ச்சர் செய்ததுடன் பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பரவ விடுவேன் என்று மிரட்டிய ஜேசுதாஸ்(45) என்பவரை சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகன், பெண் காவலர் ரெஜினாமேரி ஆகியோர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா