திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கனகவல்லிபுரம் இந்த கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை செய்து ஓய்வு பெற்ற குமார் வயது (60). மனைவியின் பெயர் சரஸ்வதி வயது (55). இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருவருக்கும் திருமணம் நடந்து விட்டதாக கூறப்படுகிறது. குமார் காலையில் வீட்டிலிருந்து வெளியே சென்றதாக கூறப்படுகிறது. சுமார் 10:30 மணி அளவில் கொலை செய்யப்பட்ட சரஸ்வதி இடத்தில் அருகில் உள்ள ஒரு பெரியவர் பேசிவிட்டு சென்றதாக கூறும் நிலையில். கணவர் குமார் 12.15 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்க்கும் பொழுது மனைவி ரத்த வெள்ளத்தில் வீட்டின் ஹாலில் கொலை செய்யப்பட்டிருக்கிறது கண்டு அதிர்ச்சி அடைந்து கத்தியதால் வீட்டில் அருகில் உள்ள மற்ற ஆட்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட சரஸ்வதியின் உடலில் கழுத்து மற்றும் மார்பகம் பின்பக்க முதுகு ஆகிய இடங்களில் கத்தியால் குத்தப்பட்டதாக கணவர் குமார் தெரிவிக்கிறார். வீட்டில் ஏதேனும் திருடு போனதா என்று கேட்டதற்கு ஒன்றும் சரியாக பார்க்கவில்லை தாலி செயின் இல்லை தாலி மட்டும் இருக்கிறது என்று பதில் அளித்தார். மேலும் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் அங்கு வந்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். ஊர் மக்கள் கூறும்பொழுது பட்டப் பகலில் இது போன்ற ஒரு பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்து இருப்பது இதுவரை நாங்கள் கேட்டதில்லை என்று கூறுகின்றனர். மேலும் இந்த கொலை நகை பறிப்பதற்காக செய்யப்பட்டார இல்லை வேறு ஏதேனும் காரணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு