திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ஆரோக்கியமேரி(60). என்பவரின் பையில் இருந்த 2 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடியது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து நகர் DSP.கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் சரத்குமார், பிரபாகரன் நகர் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட நத்தத்தை சேர்ந்த விஸ்வா(25).திருச்சியை சேர்ந்த ரமேஷ்(31). ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 2 பவுன் தங்க நகையை மீட்டு 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















