திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே உள்ள கோலியான்குளம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் தா்மலிங்கம். இவரது மனைவி சரஸ்வதி(68). இவா்கள் விவசாயம் செய்து வருகின்றனா். அவர்களது தோட்டத்துக்கு சென்ற சரஸ்வதி வெகுநேரமாகியும் திரும்பி வராததால் அவரது மகள் சாந்தி தாயை தேடி தோட்டத்திற்கு சென்ற பொழுது அவர் அங்கு மயங்கி கிடந்தது தெரிய வந்தது.
மயக்கம் தெளிந்து எழுந்த சரஸ்வதியிடம் விசாரித்த பொழுது மா்ம நபா் ஒருவா் தன்னை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு சென்றுவிட்டதாக கூறினாா். இது தொடா்பாக ராதாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை தேடி வருகின்றனா்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்