திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி தாக்கி வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட பழனி தாலுகா பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலு (எ) பாலுச்சாமியை (34). பழனி தாலுகா காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு பழனி முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பாஸ்கரன் அறிவுறுத்தலின்படி பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர்.தென்னரசன், நீதிமன்ற தலைமைக் காவலர்.தன்ராஜ் மற்றும் அரசு வழக்கறிஞர். கார்த்திக் கண்ணன் அவர்களின், சீரிய முயற்சியால் அன்று (04.10.2023) -ம் தேதி பழனி முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள், குற்றவாளி பாலுச்சாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா