திருநெல்வேலி: திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த உய்க்காட்டான் மகன் இளையராஜா(28). (20.04.2025) அன்று அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இது குறித்து அப்பெண்ணின் பெற்றோர் சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர், சையத் நிசார் அகமது விசாரணை மேற்கொண்டு இளையராஜாவை (21.04.2025) அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்