கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெண்கள் தங்கும் விடுதியின் குளியலறையில் ரகசிய கேமரா வைத்த குற்ற வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கின் குற்றவாளிகள் மேலும் பல குற்ற வழக்குகளில் ஈடுபடலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தங்கதுரை அவர்களின் உத்தரவின் பேரில் உத்தனப்பள்ளி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. ராஜசேகரன் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு.ச. தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்களிடம் உத்தரவு பெற்று பெண்கள் குளியலறையில் கேமரா வைத்த வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கின் இரண்டு நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
















