புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன், இ.கா.ப., அவர்களின் தலைமையில் இலுப்பூர் உட்கோட்டம் அன்னவாசல் காவல் நிலையத்திற்குட்பட்ட வயலோகம் கிராமத்தில் 24.07.2021ஆம் தேதியன்று மாலை 17.00 மணிக்கு கிராம விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பிரச்சனைகள் குறித்தும், அவற்றிலிருந்து எவ்வாறு நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும்,
சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் குற்றங்கள் குறித்து பயமின்றி தகவல் தெரிவிக்க வேண்டியும் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பெண்கள் உதவி மையம் குறித்தும்,
அவற்றை தொடர்பு கொள்ள 181 & 112 கட்டணமில்லாத தொலைப்பேசி எண் குறித்தும், சைபர் குற்றங்களிலிருந்து தற்காத்துக்கொள்வது குறித்தும் எடுத்து கூறினார்கள். மேலும் Village Vigilance Committee Police Officer காவலர் 2252 திரு.ஜெகநாதன் என்பவரை அறிமுகம் செய்து வைத்தும் பொதுமக்களுக்கு இணையவழி தொடர்பான குற்றங்கள் குறித்தான துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும் மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்தும், மரக்கன்றுகள் வயலோகம் கலையரங்கம் அருகே நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் இலுப்பூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர், அவர்கள் மற்றும் அன்னவாசல் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
என்றும் மக்கள் நலனில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை