திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு 15.02.2022-ம் தேதி மூலக்கரைப்பட்டி காவல்நிலைய உதவி காவல் ஆய்வாளர் திரு.ஆழ்வார், அவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும்,
பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் காவலன் SOS செயலி குறித்தும் குழந்தை திருமணம் குறித்தும்,சாலை பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் மேலும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.