திருநெல்வேலி: பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்பேரில் மாவட்ட காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் போக்சோ சட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்
25.01.2022 அன்று குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. மீராள் பானு அவர்கள், கங்கைகொண்டான்,பகுதியில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்சாலைகளில் உள்ள பெண் பணியாளர்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் போக்சோ சட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும்.
பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு ஏதேனும் துன்புறுத்தல் இருந்தாலும் காவல்துறையை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறும், பெண்கள் பாதுகாப்பு இலவச தொலைபேசி எண் 181 தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அறிவுரை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். மேலும் கொரோனா நோய் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.