புதுக்கோட்டை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைகிணங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 31.05.2020 முதல் 31.08.2021 வரை கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் குடும்பங்களில் 18 வயதிற்குட்பட்டவர்கள் என கண்டறியப்பட்டு,
பெற்றோர் இழந்த 43 குழந்தைகளுக்கு மொத்தம் ரூ.1,33,00,000/-ம் மறுவாழ்வு நிவாரண உதவித்தொகை 08.10.2021 இன்று காலை 11.30 மணியளவில் மாவட்ட ஆட்சியரக வளாக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கவிதா ராமு இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்தார்கள். மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.வெ.சரவணன் அவர்கள் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பாக குழந்தைகள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
மேலும் இந்நிகழ்வில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் ஏற்படுத்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளை தடுத்து அவர்களை எவ்வாறு பாதுகாப்பது பற்றியும் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க காவல்துறையினரால் ஏற்படுத்திய பெண்கள் உதவி மையம், போக்ஸோ சட்டம் பற்றியும் மற்றும் உதவி எண்கள் ஆகியவற்றை குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
என்றும் மக்கள் நலனில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை