திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,கொண்டக்கரை அருகே கவுண்டர் பாளையம் பகுதியில் அமைந்துள்ள பே கண்டெய்னர் டெர்மினல் எனும் தனியார் நிறுவனம் கண்டெய்னர்களை பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறது. இதில் கவுண்டர் பாளையம் பகுதியைச் சேர்ந்த 14 பெண்கள் 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு சட்ட விரோதமாக இ. எஸ்.ஐ மற்றும் பி.எஃப் ஆகிய அரசு பயன்கள் அவர்களுக்கு அளிக்காத வகையில் அவர்களை கட்டாயப்படுத்தி அல்லது நிர்பந்தம் செய்து வேலை வாங்கி உள்ளனர். இதனால் இந்த பெண்கள் பெரிதும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.இப்படி பெண்களை நம்ப வைத்து ஏமாற்றி பெண்களை கட்டாயப்படுத்தி அரசு பயன்கள் ஏதும் இந்த நிறுவனத்தில் பயன்பெறாத வகையில் வேலை வாங்கியதால் தகுந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி சென்னை டி.எம் எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையரகம், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை தலைவர் மற்றும் துணை இயக்குனர்,முதலமைச்சரின் தனிப்பிரிவு,மாநில மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளுக்கு இது குறித்து புகார் மனுக்களை அனுப்பியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லைஎனக் கூறி இன்று பெண்கள் நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு உண்டான அரசு சலுகைகளை பெற்று தரகோரி பே கண்டெய்னர் டெர்மினல் நிறுவனம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இது குறித்து மீஞ்சூர் காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவல் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் காளிராஜ் சம்பந்தப்பட்ட பெண்களுடன் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு விரைவில் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என அளித்த உறுதியின் பேரில் பெண்கள் பணிக்கு சென்றனர். இன்ஸ்பெக்டர் காளிராஜ் , வழக்கறிஞர் கனகசபா, சமூக ஆர்வலர்கள் பூபக்கர்,ஜெயபிரகாஷ், எம்.சிவா, ஒன்றிய கவுன்சிலர் ஆர்.என்.ரமேஷ், சுப்பா ரெட்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சதாசிவம்,கொண்டகரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு