தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் மாங்கரை ஊராட்சியில் உள்ள கிராமங்களில் கஞ்சா, சாலை விபத்து மற்றும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இதில் பென்னாகரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.இமயவரம்பன் அவர்கள் தலைமை தாங்கினார். காவல் ஆய்வாளர் திரு.முத்தமிழ்செல்வன் வரவேற்றார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் இளம் சமூகத்தினர் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் இளைஞர்கள் போட்டித் தேர்வு எழுதி உயர்பதவிகளை அடைய வேண்டும் கிராமங்களில் சந்துக்கடைகளில் மதுபானம் போதை பொருட்கள் விற்பது தெரிய வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
இதை எடுத்து மாங்கரை ஊராட்சியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்துவது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்படவில்லை அதனை பாராட்டும் வகையில் மாங்கரை ஊராட்சியை கஞ்சா இல்லா ஊராட்சியாக அறிவிக்கப்பட்டது மேலும் விபத்து, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பது குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது இந்நிகழ்வில் பாமக பொதுக்குழு உறுப்பினர் திரு.ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.மஞ்சுளா செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பின்னர் மாங்கரை ஊராட்சியில் 7 கிராமங்களை சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர் இதில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.