செங்கல்பட்டு: பெண்கள் தொடர்பான புகாரில் முறையாக விசாரித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஜயகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு மற்றும் சட்டப் பிரச்சனைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் போலீஸ் காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் தலைமையில் செங்கல்பட்டில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு பொன்ராம் ஏ.எஸ்.பி ஆதர்ஷ் பச்சேரா மற்றும் சமூகநலத்துறை அலுவலர் தனியார் நிறுவன மனிதவள பெண் அதிகாரிகள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பேசிய காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் பெண்கள் பணிபுரியும் நிறுவனங்களில் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க தனியாக குழு அமைக்க வேண்டும் இந்தக் குழுவில் மூத்த பெண் அதிகாரி சமூக தொண்டு நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் உட்பட 5 பேர் இருக்க வேண்டும்.
இந்நிறுவனங்களில் செயல்பட்டு வரும் குழுவினரிடம் தங்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்முறை குறித்த புகார்களை தெரிவிக்க பெண்கள் தயங்கக்கூடாது பெண்கள் பாலியல் சீண்டலில் சிறிது பெரிது என்ற பாகுபாடு கிடையாது இதனால் பாதிக்கப்பட்டு வரும் பெண்களிடம் முறையாக விசாரித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டியது காவல் துறையின் தலையாய கடமை இதுபோன்ற புகார்களில் சமரசப் பேச்சின் ஈடுபடக்கூடாது என்று தெளிவாக குறிப்பிட்டார்.
முதியோர் உட்பட அனைவருக்கும் சட்ட பணிகளை செய்வது காவல்துறையினரின் முதன்மையான பணி என்றும் வரதட்சணை தொடர்பான புகார்களில் முதலில் வழக்குப்பதிவு செய்து பின் சமூக நலத் துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.