திண்டுக்கல் : திண்டுக்கல், M.V.M. புறநகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து விபச்சாரம் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எஸ்.பி. தனிப்படையினர் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீடு வாடகைக்கு எடுத்து 2 பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சண்முகம்(43), கார்த்திகேயன்(36), சுரேஷ்(36), ஆகிய 3 பேரை கைது செய்து 2 அழகிகளை மீட்டு தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து தாடிக்கொம்பு காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா