தர்மபுரி: தர்மபுரி பகுதிகளில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக தர்மபுரி டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். அப்போது நேதாஜி சாலை, இலக்கியம்பட்டி மற்றும் பென்னாகரம் சாலையில் வாடகைக்கு வீடு எடுத்து பெண்களை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தியது தெரியவந்தது.
இதுதொடர்பாக தரகர்களாக செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன், பாண்டிச்செல்வன், மைசூர் விபின் மற்றும் தர்மபுரியை சேர்ந்த மணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 பெண்கள் மீட்கப்பட்டு சோகத்தூரில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.